Categories
உலக செய்திகள் கொரோனா

கொரோனா ரொம்ப மோசமா போயிட்டு இருக்கு – உலக சுகாதார மையம் எச்சரிக்கை …!!

உலக நாடுகளில் சிலவற்றில் கொரோனா தொற்று மிகப்பெரிய உச்சத்தை எட்டியுள்ளது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர்  தெரிவித்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம், நேற்று முன்தினம் ஜெனீவாவில் நிபுணர்களிடம் கொரோனா குறித்த தகவல்களை கூறினார். அதில் உலக அளவில் கொரோனா தொற்றால் 1.50 கோடிக்கு மேலான மக்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், 6 லட்சத்து 20 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக பதிவாகியுள்ளது என கூறினார். உலகில் உள்ள அனைத்து நாடுகளும் கொரோனா நோயால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. ஆயினும் சில நாடுகளில் தீவிரமான நிலையை கொரோனா ஏற்படுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா பாதிப்படைந்த ஒரு கோடி பேர் அல்லது மொத்த பாதிப்பில் மூன்றில் ஒரு பங்கினர் பத்து நாடுகளை மட்டுமே சார்ந்தவர்கள். ஒட்டுமொத்த பாதிப்படைந்தவர்களில் பாதிப்பேர் மூன்று நாடுகளை மட்டுமே சேர்ந்தவர்கள்.

இதனைத் தொடர்ந்து ஆட்சிக்கு தலைமை வகிப்பவர்கள் சமூக ஈடுபாடு உள்ளவர்கள் அனைவரும் இரு முக்கிய தூண்களாக இணைந்து கொரோனா எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அரசைப் பொறுத்த வரையில் அவர்கள் பயன்படுத்தக்கூடிய கருவிகளில் ஒன்று சட்டம். அது கட்டாயப்படுத்துவது மட்டும் அல்ல. பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க வேண்டியதாகும். மேலும் உலக சுகாதார நிறுவனம், ஐ.நா மேம்பாட்டுத் திட்டம், ஜார்ஜ் டவுன் பல்கலைக்கழகம் ஆகியோர் ஒன்றாக இணைந்து கொரோனா தோற்று சட்ட தரவுத்தளம் ஒன்றினை தொடங்கி இருக்கின்றோம். இது தொற்று நோய்க்கு எதிராக நாடுகள் அமல்படுத்தி இருக்கின்ற சட்டங்களின் தரவுத்தளம்.

கொரோனா நோய் உலக அளவில் பல கோடி மக்களின் வாழ்க்கையை பாதித்திருக்கின்றது. ஏராளமான மக்கள் சில மாதங்களாக வீடுகளில் அடைபட்டுள்ளனர். மக்கள் அனைவரும் தங்களின் முந்தைய வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என விரும்புகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில் நாம் அனைவரும் முந்தைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப வேண்டுமென ஆசைப்படுவது முடியாத காரியம். தொற்று நோயால் அனைவரின் வாழ்க்கையும் மாறிப் போயுள்ளது. அதனால் தற்போது வாழ்கின்ற வாழ்க்கைக்கு அனைவரும் மாறிக் கொள்வது வாழ்க்கைக்கு பாதுகாப்பான வலி’யாக இருக்கும் என உலக சுகாதார நிறுவனர் கூறியுள்ளார்.

Categories

Tech |