Categories
தேசிய செய்திகள்

கொரோனா பலி எண்ணிக்கை… 4-வது இடத்தில் இந்தியா…!!!

கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கையில் இங்கிலாந்து நாட்டை பின் தள்ளி இந்தியா 4-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
உலக நாடுகள் முழுவதும் பரவி கொண்டிருக்கும் கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.  உலகம் முழுவதும் 2 கோடிக்கும் மேலானவர்கள் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 7.5 லட்சம் பேர் பலியாகிள்ளனர்.
இவற்றில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. அதற்கு அடுத்த இடத்தில் பிரேசில் நாடு உள்ளது.  அமெரிக்காவில் 50 லட்சம் பேர் வைரசின் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
அதே சமயத்தில்  பலி எண்ணிக்கையிலும் அந்நாடு முதல் இடம் வகிக்கிறது.  அதனை தொடர்ந்து, மெக்சிகோ மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் உள்ளன.  4வது இடத்தில் இங்கிலாந்து நாடு இருந்தது.உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் சீனாவுக்கு அடுத்த இடத்தில்  இந்தியா உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 942 பேர் பலியாகிள்ளனர். அதனால் பலி எண்ணிக்கை 47 ஆயிரத்து 33 ஆக உயர்ந்துள்ளது.
இதனை தொடர்ந்து  பலி எண்ணிக்கையில் இங்கிலாந்து நாட்டை பின்னுக்கு தள்ளி இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது.  இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கையும் ஒரே நாளில் 66 ஆயிரத்திற்கு மேல் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது அமெரிக்கா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகளை விட அதிக எண்ணிக்கையாகும். இதேபோன்று மொத்த பாதிப்பு 24 லட்சம் என்ற எண்ணிக்கையை இந்தியா எட்டியுள்ள நிலையில், உலக அளவில் அதிக பாதிப்புகளை கொண்ட 3வது நாடாகவும் இந்தியா உள்ளது.

Categories

Tech |