Categories
உலக செய்திகள்

இந்த நாட்டுல கொரோனா இல்லவே இல்லையா…? சுமார் 30,000 த்திற்கும் மேலானோருக்கு செய்யப்பட்ட பரிசோதனை…. அறிக்கையை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு….!!

சுமார் 30,000 த்திற்கும் மேலானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒருவருக்குக் கூட தொற்று உறுதி செய்யப்படவில்லை என்று உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தலைவர் தெரிவித்துள்ளார்.

வட கொரியா நாட்டில் ஜூன் 10-ஆம் தேதி வரை சுமார் 30 ஆயிரத்திற்கும் மேலானோருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் ஒரு நபருக்கு கூட தொற்று உறுதிசெய்யப்படவில்லை.

மேலும் சுமார் 6 நாள் இடைவெளியில் 733 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் 149 பேருக்கு இன்ஃப்ளூயன்சா போன்ற நோய்களும், சுவாச நோய்த் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்தது மட்டுமே பரிசோதனையின் முடிவில் கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா தொற்று ஒருவருக்கு கூட உறுதிசெய்யப்படவில்லை. இந்த தகவலை வட கொரியாவின் தலைவர் உலக சுகாதார அமைப்பிடம் புள்ளி விவர அறிக்கையாக சமர்ப்பித்துள்ளார்.

Categories

Tech |