சீனா இணையத்தின் வாயிலாக குழந்தைகளின் துணிகளை ஆர்டர் செய்து பார்சல் மூலம் பெற்ற பொதுமக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
சீனாவில் ஹெபேய் என்னும் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் குழந்தைகளது ஆடையை நெய்யும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களில் 3 நபர்களுக்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆகையினால் ஹெபேய் மாவட்டத்தில் அமைந்துள்ள குழந்தைகள் ஆடையை நெய்யும் தொழிற்சாலையிலிருந்து இணையத்தின் மூலம் குழந்தைகள் துணியை ஆர்டர் செய்து அதனை பார்சல் மூலம் பெற்ற பொதுமக்களுக்கு சீன அரசாங்கம் முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதாவது குழந்தைகள் ஆடையை நெய்யும் தொழிற்சாலையில் பணிபுரியும் பணியாளர்களில் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அதிலிருந்து பார்சல் சேவையை பெற்ற பொதுமக்கள் கொரோனா தொடர்பான பரிசோதனையை கட்டயமாக மேற்கொள்ள வேண்டும் என்று சீனா கூறியுள்ளது.