Categories
உலக செய்திகள்

இங்கிலாந்து மக்களுக்கு ஓர் நற்செய்தி…. இந்த கட்டுப்பாடெல்லாம் நீக்கியாச்சு…. வெளியாகியுள்ள முக்கிய தகவல்….!!

ஜூலை 19ஆம் தேதிக்குப் பிறகு இங்கிலாந்தில் தொடரும் மற்றும் நீக்கப்படும் கொரோனா கட்டுப்பாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் பிரதமரான போரிஸ் ஜான்சன் ஜூலை 19ம் தேதிக்குப் பிறகு நாடு பழைய நிலைக்கு திரும்பும் என்று ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்த நிலையில் ஜூலை 19 ஆம் தேதிக்கு பிறகு 6 பேர் மட்டுமே கூட வேண்டும் என்ற விதி நீங்கி பொது இடங்களில் எத்தனை பேர் வேண்டுமானாலும் சந்தித்து பேசிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்படவுள்ளது. மேலும் திருமணம், இறுதி சடங்கு போன்ற நிகழ்ச்சிகளில் எத்தனை பேர் வேண்டுமானாலும் பங்கேற்று கொள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது.

இதனையடுத்து இரவு நேரங்களில் விடுதிகள் இயங்குவதற்கும், இசை நிகழ்ச்சி மற்றும் விளையாட்டுப் போட்டி போன்றவைகளில் எத்தனை பேர் வேணாலும் பங்கேற்பதற்கும் தடை நீக்கப்படவுள்ளது. இருப்பினும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருப்பவர்களை கண்காணிக்கும் பணி என்னும் கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கவுள்ளது.

Categories

Tech |