Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்யிங்க…. தன்னார்வ நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்த கலெக்டர்…. ராணிப்பேட்டையில் நடந்த சம்பவம்….!!

ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக தொண்டு நிறுவனத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய கலெக்டரான கிரான்ஸ்டன் புஷ்பராஜ் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியதாவது, ராணிப்பேட்டையில் தன்னலம் கருதாமல் செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனம், மாவட்ட சமூகத்திற்கான அலுவலருடன் சேர்ந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உதவி செய்வதற்கு அழைக்கப்படுகிறார்கள். மேலும் விருப்பமிருக்கும் நபர்கள் https://ucc.uhcitp.in/ngoregistration என்கின்ற இணையதளத்தில் மூலமாக தங்களை ஈடுபடுத்தி உதவலாம் என்றுள்ளார்.

இதனையடுத்து ஏதேனும் கூடுதலாக தகவல் வேண்டுமென்றால் ராணிப்பேட்டையில் செயல்படும் ஒருங்கிணைப்பு குழுவினுடைய உறுப்பினரான ராணிப்பேட்டை மாவட்ட சமூக நலத்திற்காக அலுவலரை 7824928598 என்கின்ற செல்போன் எண்ணிலோ அல்லது மாவட்ட மின்னஞ்சலான [email protected] என்கின்ற முகவரியிலோ தொடர்பு கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |