ராணிப்பேட்டையில் கொரோனாவிற்காக வைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து அப்பகுதி மக்கள் வெளியே சுற்றித் திரியும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரிலிருக்கும் சங்கர் நகரில் 11 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியினை சோளிங்கர் பேரூராட்சி தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவித்து அங்கு எவரும் செல்ல முடியாதவாறு தடுப்புகளையும் அமைத்தது. ஆனால் அப்பகுதியிலிருக்கும் பொதுமக்கள் பேரூராட்சி சார்பாக வைக்கப்பட்ட தடுப்பை உடைத்து வெளியே சுற்றித் திரிகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகவும் அச்சத்திலுள்ளனர். இந்நிலையில் சில சமூக ஆர்வலர்கள் அவ்வாறு வெளியே சுற்றித் திரியும் நபர்களின் மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.