Categories
உலக செய்திகள்

சிங்கம்னா எனக்கு பயம் கிடையாது…. பரிசோதனையில் சிக்கிய கொரோனா….!!

பெல்ஜியத்தில் உள்ள பெண் சிங்கத்திற்கு பசியின்மை, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டதையடுத்து அதனை பரிசோதனை செய்ததில் உலகையே அச்சுறுத்தும் கொரோனா உறுதியாகியுள்ளது.

பெல்ஜியத்தில் பைரி டைசா என்னும் பூங்கா அமைந்துள்ளது. இந்த பூங்காவிலுள்ள பெண் சிங்கம் ஒன்றிற்கு பசியின்மை, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்துள்ளது. இந்த அறிகுறிகள் சிங்கத்திற்கு தென்பட்டதையடுத்து மருத்துவர்கள் அதனை பரிசோதனை செய்துள்ளார்கள்.

அவ்வாறு சிங்கத்திற்கு செய்யப்பட்ட பரிசோதனையின் முடிவில் அதற்கு உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பெண் சிங்கத்துடன் பூங்காவிலிருந்த மற்ற 3 சிங்கங்களும் தனித்தனி கூண்டுகளில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |