தென்னாப்பிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வரும் நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஓமிக்ரான் தொடர்பான முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்துள்ளது. அந்த உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனையடுத்து மேல் குறிப்பிட்டுள்ள உருமாற்றமடைந்த கொரோனா ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபரான ஜோ பைடன் தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்துள்ள கொரோனா வைரஸ் தொடர்பான முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் மிகுந்த கவலைக்குரியது என்று தெரிவித்துள்ளார்.