Categories
உலக செய்திகள்

உருமாற்றமடைந்த கொரோனா…. விமான சேவையை ரத்து செய்த பிரபல நாடுகள்…. தென்னாப்பிரிக்காவில் சிக்கித்தவிக்கும் வெளிநாட்டு பயணிகள்….!!

தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்து உள்ளிட்ட பல முக்கிய நாடுகள் தங்கள் நாட்டிற்குள் தென்ஆப்பிரிக்காவிலிருந்து வரும் விமான சேவையை ரத்து செய்துள்ளதால் தென்ஆப்பிரிக்காவில் சிக்கி தவிக்கும் வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.

தென்னாப்பிரிக்காவில் சீனாவிலிருந்து தோன்றிய கொரோனா புதிதாக உருமாற்றமடைந்துள்ளது. அவ்வாறு உருமாற்றமடைந்த புதிய வகை வைரஸிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் காரணமாக இங்கிலாந்து உட்பட பல முக்கிய நாடுகள் அந்நாட்டிலிருந்து தங்கள் நாட்டுக்குள் நுழையும் விமான சேவையை அதிரடியாக ரத்து செய்துள்ளது.

ஆகையினால் பணியின் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ தென் ஆப்பிரிக்காவிற்கு சென்ற வெளிநாட்டு பயணிகள் தங்கள் நாடுகளுக்கு மீண்டும் திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கி தவிக்கிறார்கள்.

Categories

Tech |