Categories
தேசிய செய்திகள்

5000 ராணுவ வீரர்களுக்கு… கொரோனா தொற்று உறுதி…!!!

ராணுவத்தில் மூன்று வாரங்களில் மட்டும் 5,134 வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு போன்ற அறிவிப்பை வெளியிட்டு வருகின்றது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1076 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

பின்னர் பாதிப்பு படிப்படியாக அதிகரித்து தற்போது மே பத்தாம் தேதி நிலவரத்தின்படி 5,134 ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 5000 ராணுவ வீரர்கள் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கடந்த 3 வாரத்தில் மட்டும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா தொற்றின் முதல் அலை தாக்கத்தின் போது 133 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |