18 பயணிகளுடன் சென்ற சுற்றுலா பேருந்து 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட கோரா விபத்தில் 8 பேர் பலியாகியுள்ளனர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து சுற்றுலா பேருந்து ஒன்று சில குடும்பங்களை சேர்ந்த 18 பேருடன் சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராதவிதமாக 200 அடி ஆழமுள்ள பள்ளத்தில் திடீரென கவர்ந்துள்ளது. இதில் பயணித்த 18 பேரில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினர் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றுள்ளனர்.
பின்னர் அவர்களை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து இந்த சம்பவத்திற்கு ஆந்திர பிரதேச ஆளுநர் பிஸ்வா பூசண் ஹரிசந்தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இரவு நேரத்தில் விபத்து நிகழ்ந்த நிலையில் மீட்பு பணிகள் சவாலானதாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த கோரா சம்பவம் நெஞ்சை உறைய வைப்பதாக உள்ளது.