தஞ்சையில் பெரியார் சிலைக்கு போலீசார் கூண்டு வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சமூக ஆர்வலர்கள் கூண்டை அகற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலைக்கு நள்ளிரவில் போலீசார் கூண்டு வைத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் கூண்டை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். நேற்று முந்தினம் இரவு கூண்டை அமைக்கும் போதே தகவலறிந்து வந்த திராவிட கழகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர். அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த போது சிலர் பெரியார் சிலைக்கு அமைக்கப்பட்டுள்ள கூண்டை பிரித்து அகற்ற முயன்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.