கூ(koo) செயலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும் தகவல்கள் கசிவதாகவும் ஆராய்ச்சியாளர் ராபர்ட் பாப்டிஸ்ட் தெரிவித்துள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். அதன் மூலம் ஒன்லைன் விளையாட்டு, உரையாடல் போன்றவற்றின் மூலம் நேரம் செலவிடுகின்றனர். இதேபோன்று வாட்ஸ்அப், ட்விட்டர், ஃபேஸ்புக் முகநூல் என்று சமூக வலைதளங்களில் நேரத்தை கழித்து வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டருக்கு மாற்றாக கூ(KOO) என்ற செயலி பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த செயலில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாகவும், பயனர்களின் மின்னஞ்சல், பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களை வாய்ப்புள்ளதாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ராபர்ட் பாப்டிஸ்ட் தெரிவித்துள்ளார். ஆதார் கார்டில் உள்ள குறைபாடுகளை சில வருடங்களுக்கு முன் சுட்டிக்காட்டியவரும் இவர் தான் என்று கூறப்படுகிறது.