Categories
சினிமா தமிழ் சினிமா

கொஞ்சம் யோசிச்சு பாருங்க…! “மே மதம் முடிவில் விடிவு”…விவேக் வேண்டுகோள்..!!

கொரோனாவின் தாக்கத்திற்கு முடிவு கட்டும் விடிவு காலம், மே மாதம் முடிவில் கூட கிடைக்கலாம் என்று நடிகர் விவேக் தெரிவித்திருக்கிறார்.

கொரோனாவின் கோரத்தாண்டவத்தை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மே 3ம் தேதி வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொரோனா ஊரடங்கு முடிவதற்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், கொரோனாவின் ஆட்டம் குறைந்த பாடில்லை. இந்தியாவில் மட்டுமே இந்த கொரோனா தொற்றால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தையும் எட்டியுள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை 872 ஆக உயர்ந்திருக்கிறது.

இப்பொழுது இருக்கக்கூடிய இந்த சூழலில் கொரோனா விழிப்புணர்வு குறித்து நடிகர் விவேக் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்.

அந்த வீடியோ பதிவில் அவர் கூறியிருப்பதாவது; 

என் அன்பார்ந்த மக்களே..! அன்புள்ளம் கொண்ட இளைஞர்களே..தமிழகத்தை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும்…! சற்று சிந்தித்து பாருங்கள். இப்பொழுது முழுமையான ஊரடங்கு அறிவித்திருக்கிறார்கள்.  இதையடுத்து ஸீரோ கேசஸ்னு என்று வரவேண்டும். அப்பொழுதான் நாமும் அதிலிருந்து வெளியே வர முடியும்.

அது நம் கையில் தான் இருக்கிறது. நாம் அனைவரும் இனிமேலாவது விழித்துக் கொண்டு தனிமையில் இருப்போம், சமூக இடைவெளியை கடைபிடிப்போம்.  சிங்கப்பூரில் இருந்து வந்த லேட்டஸ்ட் ஆய்வின் படி, மே மாத இறுதியில இதற்கு ஒரு விடிவு கிடைக்க கூடும் என்று சொல்கிறார்கள்,உலகத்திற்கே. நமக்கும் சீக்கிரம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.  நாம் தமிழக அரசுடனும்,  மத்திய  அரசுடனும் இணைந்து ஒத்துழைப்போம். நன்றி…. இவ்வாறு நடிகர் விவேக் இந்த வீடியோ பதிவில் கூறியிருந்தார்.

Categories

Tech |