காங்கிரஸ் கட்சியின் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு செய்வதற்கான இறுதி நாளான இன்று பல்வேறு திருப்பங்களை தொடர்ந்து பார்க்க முடிகிறது. மல்லிகார்ஜுன் கார்கே நேற்றைய இரவு நடந்த பல கட்ட ஆலோசனைக்கு பிறகு களம் இறங்குவார் என காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்திருக்கிறது. மல்லிகார்ஜுன் கார்கே தற்பொழுது மாநிலங்களவையிலே காங்கிரஸ் கட்சியின் குழு தலைவராக இருக்கின்றார். சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். இவருடைய தீவிர ஆதரவாளரான மல்லிகார்ஜுன் கார்கே களமிறங்குவதால் திக்விஜய் சிங் போட்டியிலிருந்து விலகி இருக்கிறார்.
மல்லிகார்ஜுன் கார்கே போட்டியிடுவார் என்பது தெரியாது. அவர் போட்டியிடுவார் என முன்னுமே தெரிந்திருந்தால் நான் வேட்பு மனுதாக்கல் செய்வதற்கான எந்த நடவடிக்கையும் எடுத்திருக்க மாட்டேன். இன்று காலையிலே நான் மல்லிகார்ஜுன் கார்கே உடன் பேசினேன். அவருக்கு ஆதரவளிக்க போகிறேன். அவரை எதிர்த்து நான் போட்டியிட மாட்டேன். ஆகவே நான் இந்த தேர்தலில் வேட்பு மனுதாக்கல் செய்யப் போவதில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
தற்பொழுது மல்லிகார்ஜுன் கார்கே சோனியா காந்தி ஆதரவுடன் களமிறங்குகிறார். அவர் இன்று வேட்பு மனு தாக்கல் செய்வார் என்று தெரிகின்றது. இத்தகைய சூழ்நிலையில் வேறு யாரும் அவரை எதிர்த்து மனு தாக்கல் செய்ய முன்வராத நிலையிலே சசிதரூர் ஒருவர் மட்டுமே களத்தில் இருக்கிறார். இன்று 12 மணிக்கு பிறகு அவர் வேட்பு மனு தாக்கல் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படியே அவர் வேட்புமனு தாக்கல் செய்தாலும் நேரடி போட்டி நடைபெறுமா ? அல்லது ஒரு வாரத்திலேயே சசி தரூரும் தன்னுடைய வேட்புமனுவை வாபஸ் பெற்று விடுவாரா ? என்று பல்வேறு கேள்விகள் இருக்கின்றன.
ஆகவே காங்கிரஸ் கட்சி தலைவர் தேர்தலில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டு இறுதியாக மல்லிகார்ஜுன் கார்கே தான் சோனியா – காந்தி ராகுல் காந்தி ஆதரவு பெற்ற வேட்பாளர் என தற்போது காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருக்கின்றன. ஆகவே அவரை கட்சி தலைவராக கட்சித் தலைவராக தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.