Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“பொது விநியோகத் திட்டம்” லாரியில் ஏற்றிவரப்பட்டு…. 2 ஆயிரத்து 500 டன் சரக்கு ரயிலில்….!!

பொது விநியோகத் திட்டத்தின் அடிப்படையில் காட்பாடிக்கு சரக்கு ரயில் மூலம் 2 ஆயிரத்து 500 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையம் மூலமாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அரசால் அங்கீகரித்துள்ள அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கின்றனர். இந்த அரிசி மூட்டைகள் சேமிப்புக் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு மாவட்டங்களுக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றது.

அதன்படி மாவட்டத்திலிருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு தொழிலாளர்கள் சரக்கு ரயில் பெட்டிகளில் ஏற்றினர். இதில் 42 பெட்டிகளில் ஏற்றப்பட்ட 2 ஆயிரத்து 500 டன் அரிசி காட்பாடிக்கு பொதுவிநியோக திட்டத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டது.

Categories

Tech |