Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வீடு, நகைக்கடைகளில் கொள்ளை.. மர்ம நபர் நூதன முறையில் கைவரிசை..!!

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் வீடு மற்றும் நகை கடையில் முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் 3 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மார்த்தாண்டம் விரிகோடையை  சேர்ந்த விஜயன் என்பவருக்கு சொந்தமான நகைகடையில் கொள்ளை நடந்துள்ளது முதலில் விரிகோட்டையில் உள்ள வீட்டில் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர் பூஜை அறையில் இருந்து 57 சவரன் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாயை கொள்ளையடித்தார்.

பின்னர் அங்கிருந்த நகை கடையின் சாவியை எடுத்து வந்த மர்ம நபர் மார்த்தாண்டத்தில் உள்ள விஜயனுக்கு  சொந்தமான நகை கடையை திறந்து உள்ளே சென்றார் அங்கிருந்து 2 கிலோ மற்றும் 20 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்றார்

கொள்ளை குறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.

Categories

Tech |