Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப்பை பஞ்சாக பறக்க விட்ட ராணா, ரஸெல்…….கொல்கத்தா 218 ரன்கள் குவிப்பு…!!

ராணா மற்றும் ரஸெல் அதிரடியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்கள் குவித்துள்ளது..  

ஐ.பி.எல்லில்  இன்று  6-ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன்  பஞ்சாப்  அணிகள் விளையாடி வருகிறது . இந்த போட்டிகொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி கேப்டன் அஷ்வின் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களான கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் களமிறங்கினர்.

சுனில் நரேன் வருண் சக்கரவர்த்தி வீசிய  2வது ஓவரில் 3 சிக்ஸர் 1 பவுண்டரி என  அந்த ஓவரில் 26 ரன்கள் விளாசி நல்ல தொடக்கம் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து கிறிஸ் லின்னும், சுனில் நரேனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து ராணாவும், உத்தாப்பாவும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் பஞ்சாப் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். ஓருபுறம் உத்தப்பா பொறுப்பாக விளையாட மறுபுறம் ராணா ருத்ர தாண்டவம் ஆடினார்.இதையடுத்து வருண் சக்கரவர்த்தி ஓவரில் ராணா 63 (34) ரன்கள்  (7 சிக்ஸர், 2 பவுண்டரி) விளாசி அவுட் ஆனார். இதையடுத்து களமிறங்கிய அதிரடி சூறாவளி ஆண்ட்ரே ரஸெல் பஞ்சாப் பந்து வீச்சாளர்களை பஞ்சாக பறக்க விட்டார்.

குறிப்பாக சமி ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி ருத்ர தாண்டவம் ஆடினார். இறுதியில் கடைசி  ஓவரில் ரஸெல் 48 (17) ரன்கள் (5 சிக்ஸர், 3 பவுண்டரி)  ஆட்டமிழக்க இறுதியில் 20 ஓவர் முடிவில் 218 ரன்கள் குவித்தது.ராபின் உத்தப்பா67 *( 50), தினேஷ் கார்த்திக் 1* ஆட்டமிழக்கமால் களத்தில் இருந்தனர்.. பஞ்சாப் அணியில் சமி,  வருண் சக்கரவர்த்தி, விலியன், ஆண்ட்ரு டை ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

Categories

Tech |