Categories
கிரிக்கெட் விளையாட்டு

சுப்மன் கில் அரைசதம்….. ஆண்ட்ரே ரஸெல் அபாரம்….. டெல்லிக்கு 179 ரன்கள் இலக்கு..!!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழந்து 178 ரன்கள் குவித்துள்ளது  

2019 ஐ.பி.எல் போட்டி மார்ச் 23ம் தேதி தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  ஐ.பி.எல் 26வது லீக் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ்  அணிகள் விளையாடி வருகின்றன. இப்போட்டி  கொல்கத்தா ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் தொடங்கியது. கொல்கத்தா இந்நிலையில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 

இதையடுத்து கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் லின்னும், சுப்மன் கில்லும், களமிறங்கினர். முதல் ஓவரில் இஷாந்த் சர்மா வீசிய முதல் பந்தில் கிறிஸ் லின் 0 ரன்னில் போல்ட் ஆனார். அதன் பின்  ராபின் உத்தப்பா 28 (30) ரன்களும், நித்திஷ் ராணா 11 ரன்களும்  குவித்து ஆட்டமிழந்தனர்.

அதன் பின் சுப்மன் கில் அற்புதமாக விளையாடி ஐபிஎல்லில் தனது 2வது அரைசதத்தை பதிவு செய்து 65 (39) ரன்களில் ஆட்டமிழந்தார். இதையடுத்து தினேஷ் கார்த்திக் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றமளித்தார். இதையடுத்து ஆண்ட்ரே  ரஸெலும், ப்ராத்வெயிட்டும் ஜோடி சேர்ந்தனர். ஆண்ட்ரே ரஸெல் வழக்கம்  போல் அதிரடியாக விளையாடி 21 பந்துகளில் 45 ரன்கள்  (4 சிக்ஸர், 3 பவுண்டரி) அடித்து மோரிஸ் பந்து வீச்சில் ரபாடா வசம் பிடிபட்டார்.

 

அதை தொடர்ந்து   ப்ராத்வெயிட் 6 ரன்னில் வெளியேற இறுதியில் 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி  7 விக்கெட் இழந்து 178 ரன்கள் குவித்தது. பியூஸ் சாவ்லா 14* (6) ரன்களிலும், குல்தீப் யாதவ் 2 ரன்னிலும் ஆட்டமிழக்க்மால்  களத்தில் இருந்தனர். டெல்லி அணியில் அதிகபட்சமாக கிறிஸ் மோரிஸ், ககிசோரபாடா, கீமோ பால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா 1 விக்கெட்டும் வீழ்த்தினார். இதையடுத்து டெல்லி அணி 179 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.

Categories

Tech |