ஐசிசி வெளியிட்ட பேட்ஸ்மேனுக்கான தரவரிசை பட்டியலில், பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் முதலிடத்தை பெற்றுள்ளார்.
நேற்று ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் , பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலை வெளியிட்டது. இந்த பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் ,பாகிஸ்தான் அணியின் கேப்டனான பாபர் அசாம் ,முதலிடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னதாக முதலிடத்தில் இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி முன்னிலை வகித்தார். தற்போது பாபர் அசாம் முதலிடத்தை பிடித்து ,விராட் கோலியை பின்னுக்குத் தள்ளினார்.
சமீபத்தில் பாகிஸ்தான் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் கடந்த வாரம் நடைபெற்ற, தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டிகளில் , பாபர் அசாம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் அந்தப் போட்டியில் 94 ரன்களை குவித்து, தரவரிசை பட்டியலில் 2வது இடத்தில் இருந்து, தற்போது நம்பர் ஒன் இடத்திற்கு முன்னேறியுள்ளார். அதோடு பேட்ஸ்மேன் தர வரிசை பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பெற்ற, 4வது பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.