அமெரிக்க அதிபராக ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதற்காக சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நடைபெற்றபோது ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் காவல்துறை அதிகாரி உட்பட 5 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் பதவியேற்பு விழா தலைநகர் வாஷிங்டனில் இன்று நடைபெற உள்ளது.
இதில் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்ட கமலா ஹாரிஸ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். அதிலும் குறிப்பாக அவருடைய தாய் தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழர்களின் பாரம்பரிய கலையான கோலம் முக்கிய அங்கமாக பதாவியேற்பு விழாவில் உள்ளது. இந்த பதவியேற்பு விழாவில் சமூக இடைவெளியை கடைபிடித்து இருக்கைகள் அமைத்து அலங்காரத் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.