Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கொலை மிரட்டல் விடுத்த வாலிபர்…. மளிகை கடைக்காரர் அளித்த புகார்…. போலீஸ் நடவடிக்கை….!!

மளிகை கடைக்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள திசையன்விளை பகுதியில் ஞான சேவியர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை முதலிவாக்கத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் மிட்டாதார்குளம் பகுதியில் டேவிட் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் முதலிவாக்கத்தில் உள்ள சிமெண்ட் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் உறவினர்களான இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த மாதம் ஞான சேவியர் மளிகை கடையை டேவிட் ராஜ் தீ வைத்து எரித்துள்ளார்.  இதுகுறித்து ஞான சேவியர் மாங்காடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் டேவிட் ராஜை தேடி வந்தனர். இந்நிலையில் ரம்மதபுரம் பேருந்து நிலையத்தில் ஞான சேவியர் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த டேவிட் ராஜா ஞான சேவியரை அடித்து உதைத்துள்ளார். மேலும் ஞான சேவியரிடம் டேவிட் ராஜா கொடுத்த புகாரை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். இதுகுறித்து ஞான சேவியர் திசையன்விளை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் டேவிட் ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |