Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

உடல் குளிர்ச்சியாகவும், புத்துணர்வுடனும் இருக்க ஈஸியான வீட்டு வைத்தியம்..!!!

கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூடு, நீர் எரிச்சல், நீர் குத்தல், கண் எரிச்சல்,அல்சர்,போன்ற பிரச்சனைகள் தீர எளிய வீட்டு வைத்தியம்…!

சிலருக்கு இயல்பாகவே உடல் சூடு அதிகமாக இருக்கும். வெயில் காலத்தில் நீர்ச்சத்து குறைவதால், சூடு மேலும் அதிகரிக்கக்கூடும்.  இதனால் அடிவயிற்று வலி, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல், அல்சர் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். மேலும் முடி கொட்டுதல் அதிகமாக இருக்கும். உடலின் வெப்பத்தை முதலில் கண்கள்தான் வெளிப்படுத்தும்.

கண்கள் சூடாக இருப்பது போல் உணர்தல், கண் எரிச்சல், கண்கள் சிவந்துபோதல், கண்கள் பொங்கி அழுக்கு வெளியேறுதல் போன்றவை, நம் உடல் சூடாக இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும். இதுபோன்ற காலங்களில் கார உணவுகளைத் தவிர்த்து லெமன் ஜூஸ்,  நீர்மோர்,  தர்பூசணி பழங்கள், மாதுளை போன்றவற்றை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.

வெப்பத்தால் தண்ணீர் தாகம் அதிகரிக்கும் பொழுது உடனே கூல்ட்ரிங்ஸ் குடிப்பதை தவிர்த்து இளநீர்  குடிப்பது உடலுக்கு  நல்லது. அதே மாதிரி பிரிட்ஜில் வைத்த தண்ணீரை குடிப்பதை  தவிர்த்து, மண்பானை தண்ணீரை அருந்துவது உடலுக்கும் நல்லது.  உடல் சூட்டையும் குறைக்கும். இது போன்ற பிரச்சனை உள்ளவர்கள் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவதற்கு ஒரு எளிய வீட்டு வைத்தியம்.

முதல் நாள் இரவு ஒரு பவுலில்  100ml வெதுவெதுப்பான பாலை எடுத்துக்கொள்ளுங்கள்.  அதில் சிறிது தயிர்விட்டு உரை ஊற்றுங்கள். அந்த பாலில் ஒரு ஸ்பூன் வெந்தயத்தை போடுங்கள்.  அதனோடு ஒரு கொத்து கறிவேப்பிலை நன்றாக அலசி விட்டு சேர்த்து விடுங்கள்.  காலையில் எழுந்தவுடன் பார்த்தால் பால் தயிராகி வெந்தயமும் கருவேப்பிலையும் நன்றாக ஊறி இருக்கும்.

பல்துலக்கி விட்டு வெறும் வயிற்றில் முதலில் கருவேப்பிலையை மென்று சாப்பிட்டுவிட்டு தயிருடன் சேர்த்து வெந்தயத்தையும் சாப்பிட்டு விடுங்கள்.அன்றைய நாள் முழுவதும் உடல் குளிர்ச்சியாக இருக்கும். கண்களில் எரிச்சல் இருக்காது. அல்சர் பிரச்சனை, வயிற்று வலி,  நீர் எரிச்சல்,  நீர் குத்தல்,  உடல் சூடு போன்ற பிரச்சனைகள் இருக்காது. அதே மாதிரி உடல் வெப்பத்தால் முடி கொட்டும்  பிரச்சினையும் தீர்ந்துவிடும்.

இதை, வாரத்தில் மூன்று நாட்கள் செய்து வந்தால் இந்த கோடைகாலம் உங்களுக்கு வசந்த கால மாகவே தோன்றும்.

Categories

Tech |