வீடுகளில் தொல்லை தரும் எறும்புகளை ஈசியாக விரட்டலாம். அவற்றின் வழிகளை பற்றி அறிவோம்.
கோடைகாலம் வந்தாலே இந்த எறும்புகளின் தொல்லையும் வந்து விடுகிறது. அவைகள் மளிகை பொருட்கள், தின்பண்டங்கள், குளிர்ச்சியான இடங்கள் என அதை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி இவைகளால் ஏற்படும் தொல்லைகளில் இருந்து விடுபட வேண்டுமல்லவா.? அதற்காகத்தான் வீட்டிலேயே செய்ய கூடிய சில வழிகள் இருக்கிறது அவற்றை பற்றி தெரிந்து கொள்வோமா.?
சாக்பீஸ் :
எறும்பு சாக்பீஸில் கால்சியம் கார்பனேட் இருக்கிறது. அதனால் எறும்புகள் எளிதில் வராது. எனவே எறும்புகள் இருக்கும் இடத்தில் சாக்பீஸால் கோடு போட்டு விட்டால் முடிந்தது.
எலுமிச்சை :
எறும்புகள் உங்கள் வீட்டில் எந்த இடத்தில் எறும்புகள் வரும் இடத்தில் எலுமிச்சை சாறை பிழிந்து விடுங்கள். அல்லது எலுமிச்சை தோலை வைத்து விடுங்கள் எறும்புகள் வராது.
மிளகு :
மிளகின் நெடி எறும்புகளுக்கு பிடிக்காது. அதனால் மிளகு பொடி தூவி விடுங்கள்.
உப்பு :
எறும்புகள் நுழையும் இடம் என்று மூலை முடுக்குகளில உப்பை தூவினால் வராது.
வினிகர் :
வினிகர் மற்றும் தண்ணீர் இவை இரண்டையும் சம அளவாக எடுத்து கலந்து எறும்பு வரும் வரக்கூடிய இடத்தில் தெளித்து விடுங்கள்.
பட்டை :
பட்டை அல்லது கிராம்புப் பொடிகளை எறும்பு வரும் இடத்தில் தூவி விட்டாலும் எறும்பு வராது.