தமிழ் சினிமாவில் பொய் சொல்ல போறோம் என்ற திரைப்படத்தின் மூலமாக நடிகை பியா பாஜ்பாய் அறிமுகமானார். இதனையடுத்து இவர் கோவா, கோ, ஏகன் போன்ற பல திரைப்படங்களில் நடித்து தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார். இவரை பற்றி பேசினாலே நம் நினைவுக்கு முதலில் வருவது சுருள் சுருளாக இருக்கும் இவருடைய முடிதான். இயக்குனர் கே.வி ஆனந்த் இயக்கிய கோ படத்தில் நடிகர் ஜீவாவை பியா ஒரு தலையாக காதலிப்பது போல நடித்து இருப்பார்.
அந்த படத்தில் பியாவின் துறுதுறுப்பான நடிப்பு பெரும்பாலான ரசிகர்களை பெற்றுத் தந்தது. அதன்பின் ஒரு சில தமிழ் திரைப்படங்களில் நடித்த பியா தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இதற்கிடையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் பியா தற்போது ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார். அதாவது புதிதாக வாங்கியிருக்கும் சுமார் 70 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ கார் ஒன்றை தான் அவர் அதில் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காரை வாங்கியபோது எடுத்த புகைப்படத்தை தற்போது வெளியிட்டு இருக்கும் பியா இது என்னுடைய நெடுநாள் கனவு என்று தெரிவித்துள்ளார். தற்போது பிரபலங்கள் பல பேரும் இந்த பிஎம்டபிள்யூ காரை வைத்து இருப்பதை பெருமையாக கருதுகின்றனர். சமீப காலமாகவே சின்னத்திரையில் உள்ள நடிகைகள் முதல் பெரிய திரையில் உள்ள நடிகைகள் வரையிலும் அனைவரும் இந்த பிஎம்டபிள்யூ காரை வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் பியாவும் இந்த பட்டியலில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆகவே ரசிகர்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை பியாவுக்கு தெரிவித்து வருகின்றனர்.