Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

மூட்டு வழியால் அவஸ்தையா…? இதை மட்டும் செய்து பாருங்கள்…!!

தற்போதுள்ள காலகட்டத்தில் இளம் வயதினரும் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். அவர்கள் மூட்டு வலியிலிருந்து விடுதலைப் பெற சில எளிய குறிப்புகள்.

  1. கால் டம்ளர் தண்ணீரில் கருப்பு எள்ளை இரவு முழுவதும் ஊறவைத்து அதனை காலையில் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் மூட்டுவலி குணமடையும்.
  2. சுக்கை எலுமிச்சை சாறு விட்டு நன்றாக அரைத்து மூட்டுகளில் பத்து போட்டு வந்தால் வலி காணாமல் போகும்.
  3. வாகை பூ மற்றும் வேப்பம் பூ ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து நன்றாக வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் அரை ஸ்பூன் அளவு சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குணமடையும்.
  4. தேங்காய் எண்ணெய்யை மிதமான சூட்டில் கற்பூரம் கலந்து வலி இருக்கும் இடத்தில் தேய்த்துவந்தால் வலி பறந்து போகும்.
  5. கடுகு, கஸ்தூரி மஞ்சள் மற்றும் சாம்பிராணி ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து சிறிதளவு கற்பூரம் சேர்த்து வலி இருக்கும் இடத்தில் போட்டு வந்தால்  மூட்டுவலி குணமடையும்.
  6. சாதம் வடிக்கும் தண்ணீரை வலி இருக்கும் இடத்தில் ஊற்றி வந்தால் வலி காணாமல் போகும்.

Categories

Tech |