ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றுள்ளது .
14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 49-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பேட்டிங் தேர்ந்தெடுத்தது.அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் மட்டுமே குவித்தது. கொல்கத்தா அணி தரப்பில் டிம் சவுத்தி, ஷிம் மாவி, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.
இதன்பிறகு 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கொல்கத்தா அணி விளையாடியது. இதில் தொடக்க வீரர்களாக வெங்கடேஷ் அய்யர்-ஷுப்மான் கில் ஜோடி களமிறங்கினர். இதில் வெங்கடேஷ் ஐயர் 8 ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய ஷுப்மான் கில் 57 ரன்னில் ஆட்டமிழந்தார். இறுதியாக கொல்கத்தா அணி 4 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது .