Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கிசான் திட்டத்தில் போலி நபர்களை சேர்த்து பல கோடி ரூபாய் மோசடி..!!

கிசான் திட்டத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில் அதிகாரி குழுவினர் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் போலி நபர்களை சேர்த்து பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக எழுந்த புகாரில் ஏற்கனவே இந்த முறைகேடுகளில் உள்ள அதிகாரிகளை குழுவின் விசாரணை அதிகாரியாக சேர்த்தால் விசாரணை பயனற்றுப் போகும் என மனித பாதுகாப்பு கழகம் குற்றம் சாட்டியுள்ளது. நாகர்கோவில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அதன் மாநில தலைவர் திரு ஜெயமோகன், கிசான் முறைகேட்டில் நில பயனீட்டாளர்கள் மட்டுமே பயன் அடைகிறார்கள், ஏழைகள் தற்கொலைக்கு தூண்டப்படுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் சுமார் 500 க்கும் மேற்பட்ட முறைகேடு நடந்து கொண்டிருக்கின்றன. இந்த முறைகேட்டில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும், அதுமட்டுமில்லாமல் அனைத்து அதிகாரிகள் மீதும் வழக்கு பதிவு செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

Categories

Tech |