உலகம் முழுவதும் வருகிற 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவர்கள் தங்கள் லிஸ்டில் உள்ள அனைத்து பொருட்களையும் வாங்குவதில் மும்முரம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் கடைசி நிமிடத்தில் கிறிஸ்துமஸுக்கு உங்கள் வீட்டை எப்படி அலங்கரிப்பது என்று நினைத்து நீங்கள் கவலைப்பட்டால், இந்த பதிவு உங்களுக்கு உதவியாக இருக்கும்.
கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே இருக்கும் நிலையில் கடைசி நிமிட வீட்டு அலங்காரம் குறித்து நாம் காண்போம். அதன்படி, ரேப்பிங் பேப்பரைப் பயன்படுத்த வேண்டும். கிறிஸ்துமஸ் கருப்பொருள் கொண்ட மூவர்ண (சிவப்பு, வெள்ளை மற்றும் பச்சை) மெழுகுவர்த்திகள் பல வடிவங்கள் மற்றும் அளவுகளில் வருகிறது. அதை நீங்கள் பல்வேறு மூலைகளிலும் வைக்கலாம்.
அந்த பண்டிகை மகிழ்ச்சியை நுட்பமான ஒளி மற்றும் கிறிஸ்துமஸ் வாசனை உடன் பரப்பலாம். அதன்பின் துடிப்பான குஷன் கவர்களைப் பயன்படுத்தலாம். உங்களது படுக்கைக்கு கிறிஸ்துமஸ் கருப்பொருள் போர்வைகள் மற்றும் பெட்ஷீட்களைப் பயன்படுத்தலாம். நீங்கள் புத்தகங்கள், நாவல்கள் மற்றும் பத்திரிகைகளின் தொகுப்பை வைத்து இருந்தால் வண்ணமயமான கிறிஸ்துமஸ் மரத்தை உருவாக்க அவற்றை பயன்படுத்தலாம். பரிசுகளை போன்று தோற்றமளிக்க நீங்கள் சில புத்தகங்களை விடுமுறை கருப்பொருள் கொண்ட காகிதத்துடன் மடிக்கலாம்.