Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“சுத்தமாக வைக்க வேண்டும்” தடுப்பூசி செலுத்துவதன் அவசியம்…. கலெக்டரின் பேச்சு….!!

கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் குடியிருப்பு பகுதிகளை சுத்தமாக வைக்க வேண்டும் என்று பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருநெய்ப்பேர் ஊராட்சியில் கலெக்டர காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் கிராமசபை கூட்டம் ஒன்று நடந்தது. அந்த கூட்டத்தில் எம்.எல்.ஏ. பூண்டி கே.கலைவாணன் முன்னிலை வகித்தார். அப்போது கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் பேசியதாவது “மத்திய மாநில அரசின் மூலமாக மக்கள் நலத்திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனையடுத்து பொதுமக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். இதில் கிராம வளர்ச்சி குறித்தும், தேவையான திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு அரசுக்கு அறிக்கையாக அனுப்பப்படுகிறது.

அதன்பின் பொதுமக்கள் திறந்தவெளியில் மலம் கழிப்பதை கைவிட்டு அரசில் தனிநபர் இல்ல கழிப்பறை திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதனைத்தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளை சுற்றி குப்பைகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். மேலும் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். அதுமட்டுமின்றி கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்” என்று அவர் தெரிவித்துள்ளார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், உதவி கலெக்டர் பாலச்சந்திரன், துணை கலெக்டர் தனலெட்சுமி, உதவி இயக்குனர் பழனிச்சாமி, ஒன்றிய குழுத்தலைவர் தேவா உட்பட பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |