Categories
கிரிக்கெட் விளையாட்டு

கர்ரன், பூரன் அதிரடி…. பஞ்சாப் 183 ரன்கள் குவிப்பு…. இலக்கை எட்டுமா கொல்கத்தா!!

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 183 ரன்கள் குவித்துள்ளது 

ஐ.பி.எல் 52 வது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடி வருகிறது . இப்போட்டி பஞ்சாப்  மொஹாலி ஸ்டேடியத்தில்  இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்   பீல்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பஞ்சாப் அணியில் கிறிஸ் கெய்லும், கேஎல் ராகுலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கேஎல் ராகுல் 2 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் வாரியர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அதை தொடர்ந்து கெய்லும் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 4.1 ஓவரில் 22/2 ரன்கள் எடுத்து தடுமாறியது.

Imageஇதையடுத்து மயங் அகர்வாலும், நிகோலஸ் பூரனும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இதனால் அணியின் ஸ்கோர் உயர்ந்தது.  பூரன் அதிரடியாக விளையாடி 27 பந்துகளில் 48 ரன்கள் (4 சிக்ஸர், 3 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு மயங் அகர்வால் 36 (26) ரன்களில் ரன் அவுட் ஆனார்.

Image

இதன் பிறகு சாம் கர்ரனும், மன்தீப் சிங்கும் இணைந்தனர். இந்த ஜோடிசிறப்பாக விளையாடி வந்தது. அதன் பின் மன்தீப் சிங் அவர் பங்குக்கு 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் . இதை தொடர்ந்து வந்த அஷ்வின் 0 ரன்னில் ஆட்டமிழந்தாலும்  கடைசியில் சாம் கர்ரன் அதிரடியில் இறங்கினார்.இதனால் ரன் வேகமாக உயர்ந்தது.

Image

குறிப்பாக கடைசி ஓவரில்  சிக்ஸர் பவுண்டரி என விளாச பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழந்து 183 ரன்கள் குவித்தது.கடைசி வரை களத்தில் நின்ற  சாம் கர்ரன் 24 பந்துகளில் 55* ரன்கள் (7 பவுண்டரி, 2 சிக்ஸர்) விளாசினார். கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக சந்தீப் வாரியர் 2 விக்கெட் வீழ்த்தினார்.இதையடுத்து கொல்கத்தா அணி 184 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கி விளையாடி வருகிறது.

Categories

Tech |