Categories
கிரிக்கெட் விளையாட்டு

பஞ்சாப் அணி அதிரடி தொடக்கம்….. 10 ஓவர் முடிவில் 93/0..!!

பஞ்சாப் அணியின் அதிரடி தொடக்கத்தால் 10 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 93 ரன்களுடன் விளையாடி வருகிறது. 

ஐ.பி.எல் தொடரில் 24வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்  மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதும் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு தொடங்கியது. காயம் காரணமாக கேப்டன் ரோஹித் சர்மா இப்போட்டியில் விளையாடாததால் அவருக்கு பதில் பொல்லார்ட் அணியை வழி நடத்துகிறார். இந்நிலையில்  டாஸ் வென்ற வென்ற கேப்டன் பொல்லார்ட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக கிறிஸ் கெய்லும், கே.எல் ராகுலும் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அதிரடியில் இறங்கினர். இருவரும் மும்பை அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு பவுண்டரியும்,  சிக்ஸரும் விளாசினர். இருவரும் அரைசதத்தை நோக்கி பயணித்து வருகின்றனர். தற்போது கிறிஸ் கெய்ல்48 ( 30), கே.எல் ராகுல் 42 (30)  ரன்களுடன் விளையாடி வருகின்றனர்.

Categories

Tech |