90 சட்டப்பேரவை கொண்ட ஹரியானாவில் தனிப்பெரும்பான்மை பெற 46 தொகுதிகள் கைப்பற்ற வேண்டும். ஆனால் பாஜக 40 இடங்களிலும் காங்கிரஸ் 31 இடங்களிலும் வெற்றி பெற்றது. சாவி சின்னத்தில் போட்டியிட்டு ஆட்சி அமைப்பதற்கான சாவியையும் கைப்பற்றியிருக்கும் ஜனநாயக் ஜனதா கட்சி 10 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. வாக்கு எண்ணிக்கை முடிவில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் ஜனநாயக் ஜனதா கட்சியின் இளம் தலைவரான துஷன் சவுதாலா ஆட்சியை தீர்மானிப்பவராக இருந்து வருகிறார் ஹரியானா துஷன் சவுதாலா கிங் மேக்கராக உருவெடுத்து இருக்கிறார்.
31 வயதான இளம் தலைவர் துஷன் சவுதாலா யார் இவர் ? இவரது பின்னணி என்ன ?
ஹரியானா முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலா வின் மகன் வழி பேரன் தான் இந்த துஷன் சவுதாலா இவருடைய தந்தை முன்னாள் எம்பி அஜய் சவுதாலா. தமது குடும்ப பாரம்பரியத்தை பின்பற்றி இந்திய தேசிய லோக்தளம் கட்சியின் பொறுப்பை பெற்ற துஷன் சவுதாலா 2014 ஆம் ஆண்டு அதே கட்சியின் சார்பில் நாட்டின் இளம் எம்பியாக 26 வயதில் தேர்ந்தெடுக்கப்பட்டு லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். முன்னாள் முதலமைச்சர் ஓம்பிரகாஷ் சவுதாலா ஊழல் வழக்குகளில் சிக்கிய நிலையில் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது.
முதலமைச்சர் வேட்பாளராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டதாக கூறி கடந்த 2018ஆண்டில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து டிசம்பரில் புதிய கட்சி தொடங்கியது. துஷ்யந்த் சவுதாலா முதல் கூட்டத்திலேயே 6 லட்சம் பேரை திரட்டி வலிமை காட்டினார். முன்னாள் துணைப் பிரதமரும் , தன்னுடைய கொள்ளு தாத்தா_வுமான தேவிளால் நினைவாக ஜனநாயக் ஜனதா கட்சி என்ற பெயரை சூட்டிக்கொண்டார். புதிய கட்சி தொடங்கிய ஒரு ஆண்டுக்குள் எதிர்கொள்ளும் முதல் சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் கிங் மேக்கராக உருவெடுத்துள்ளார் துஷ்யந்த் சவுதாலா.