பாரத பிரதமர் மோடி குறித்தான புத்தகம் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை,மோடி 20 என்கின்ற இந்த புத்தகம் ட்ரீம்ஸ் மீட் டெலிவரி. நம்முடைய கனவுகள், நாம் செய்யக்கூடிய வேலைகளை சென்று பார்க்கும்போது ஏற்படுகின்ற தருணத்தை புத்தகமாக கொண்டு வந்திருக்கின்றார்கள். இந்த புத்தகத்தை படிக்கும் போது எனக்கு தோன்றியது…. நாலு சேப்டர் படிக்காம இருந்தேன். நேற்று உட்கார்ந்து அதையும் படித்து விட்டேன்.
அந்த புத்தகத்திற்கு நாம் வருகின்றோம். ராஜா அண்ணன் வருகின்றார் என போட்டு இருக்கும்போது, எல்லாம் படித்துவிட்டு வருவது தான் முறை என்று…. இந்த புத்தகத்தை படித்து முடிக்கும் போது ஒரே ஒரு வார்த்தை மட்டும் தான் என்னுடைய ஞாபகத்திற்கு வந்தது. ஒரு மனிதன் சின்ன விஷயங்களை எப்படி செய்கின்றாரோ, அதை பொருத்துதான் அந்த மனிதன் எவ்வளவு உயரத்திற்கு செல்ல முடியும் என்பதை இந்த வாழ்க்கை தீர்மானம் செய்கிறது.
இந்த புத்தகத்தை எழுதி இருக்கக்கூடிய 21 சேப்டர்…. எழுதியிருக்கக்கூடிய அனைவருமே பாரத பிரதமர் நரேந்திர மோடி ஐயாவை மிக நெருக்கமாக பார்த்தவர்கள், பயணம் செய்தவர்கள், சில பேர் அதிகாரிகளாக…. பாரதிய ஜனதா கட்சியைச் சார்ந்தவர்களோடு சேர்ந்து வேலை செய்தவர்கள் என்று தான் இருக்கிறார்கள்.
நிர்மலா சீதாராமன் அவர்கள், டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள், அஜித் தோவல் அவர்கள் நேஷனல் செக்யூரிட்டி அட்வைசர்…. கிட்டத்தட்ட 80 சதவீதம் பார்த்தீர்கள் என்றால், அவர்கள் அனைவரும் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களை அருகில் இருந்து பார்த்தவர்கள், பிரதமர் பயணத்திலே அவர்களுடைய பயணமும் இணைந்து சென்றது என பேசினார்.