பிரிட்டன் மன்னர் சார்லஸ், எகிப்தில் நடக்க இருக்கும் இந்த வருடத்திற்கான COP27 என்ற மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பிரிட்டன் நாட்டிற்கு மன்னரான பிறகு, சார்லஸ் முதலில் மேற்கொள்ளப்போகும் வெளிநாட்டு பயணம் தொடர்பில் எதிர்பார்ப்புகள் கிளம்பியது. அதனைத்தொடர்ந்து எகிப்தின் ஷர்ம் எல் ஷேக் என்ற நகரத்தில் நடக்கவுள்ள COP27 என்ற ஐ.நா காலநிலை மாநாட்டில் மன்னர் பங்கேற்பார் என்று தெரிவிக்கப்பட்டது.
இது தான் அவர் மன்னரான பிறகு மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், நவம்பர் மாதத்தில் நடக்கவுள்ள அந்த மாநாட்டில் மன்னர் பங்கேற்க மாட்டார் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது, நாட்டின் பிரதமரான லிஸ் ட்ரஸ் தான் இந்த மாநாட்டில் மன்னர் பங்கேற்க கூடாது என்று அறிவுறுத்தியதாக கூறப்பட்டிருக்கிறது. ஆனால், இது குறித்து பிரதமர் கூறுகையில் மன்னருக்கு உத்தரவிடுவது போன்று யோசனை கூறுவது அபத்தம் என்று கூறியிருக்கிறார்.