கிணற்றுக்கு குளிக்க சென்ற சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். இவர் விவசாயியாக உள்ளார். இவருக்கு 15 வயதில் நாவுக்கரசி என்ற மகள் உள்ளார். நாவுக்கரசி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நாவுக்கரசியும் அவரது சகோதரி கவியரசி மற்றும் சகோதரர் தேவா ஆகிய மூவரும் அப்பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான நிலத்தில் உள்ள கிணற்றில் குளித்துக் கொண்டிருந்தனர்.
மூவருக்கும் நீச்சல் தெரியாததால் அவர்கள் கிணற்றில் உள்ள படிக்கட்டுகளை பிடித்து குளித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று கைநழுவியதால் நாவுக்கரசி கிணற்றின் மையப் பகுதிக்கு தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு மூழ்கியுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் 80 அடி ஆழமுள்ள அந்த கிணற்றில் இருந்து 4 மோட்டார் மூலம் தண்ணீரை வெளியேற்றினர். பின்னர் சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்பு நாவுக்கரசியின் சடலத்தை மீட்டனர்.