வடகொரிய நாட்டின் அதிபர் கிம் ஜாங் உன், அணு சக்தியை பலப்படுத்தும் நோக்கத்தை எப்போதும் கைவிட மாட்டோம் என்று கூறியிருக்கிறார்.
வடகொரியா அரசு போர் அச்சுறுத்தல்களில் தங்களை காக்க தானாகவே அணு ஆயுதங்களை உபயோகிக்கும் சட்டத்தை கொண்டு வந்திருக்கிறது. இது தொடர்பில் பாராளுமன்றத்தில் வடகொரிய அதிபர் தெரிவித்ததாவது, அணுசக்திக்கான நிலையை உறுதிப்படுத்த இந்த சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
இது மட்டுமல்லாமல் அணு சக்தியை பலப்படுத்தப்படும் நோக்கத்தை எப்போதும் கைவிட மாட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் தங்களின் அரசு மற்றும் மக்களுக்கு ஏற்படும் பேரழிவை தடுப்பதற்காக அணுகுண்டுகளை தாங்களாகவே உபயோகிக்கலாம் என்று இந்த சட்டம் தெரிவிக்கிறது என கூறியிருக்கிறார்.