Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

தாய் மகனை கொன்று விட்டு 22 சவரன் கொள்ளை…..!!

நகைக்காக தாய் மகனை கொள்ளையர்கள் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி அருகே அரக்கோணம் சாலையில் அருகேயுள்ள  பி.டி.புதூர் பாலாஜி நகரைச் சேர்ந்தவர் வனபெருமாள். இவர் தனியார் தொழிற்சாலையில் காவலாளி மேற்பார்வையாளராக பணியாற்றி வருகின்றார். நேற்று வழக்கம் போல் இவர் வேலைக்கு சென்று விட்டு இன்று காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது கதவு உள்புறம் தாழிடபட்டு நீண்ட நேரம் திறக்காமல் இருந்தது. இதனால் சந்தேகமடைந்த பெருமாள் வீட்டின் பின்புறம் வழியாக எகிறி குதித்து வீட்டிற்குள்ளே சென்று பார்த்தபோது தலையில் வெட்டுக் காயத்துடன் ரத்தவெள்ளத்தில் அவரது மனைவி வீரலட்சுமி பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெருமாள் வீட்டின் மற்றொரு இடத்தில் அவரது 10 வயது மகன் போத்திராஜ்  இஸ்திரி பெட்டி ஒயர் மூலம் கழுத்து இறுக்கி கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் இது குறித்து இதுகுறித்து பெருமாள் திருத்தணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் சம்பவ இடத்துக்கு  நேரில் சென்று திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி பொன்னி  விசாரணை நடத்தினார். மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றது. போலீஸ் விசாரணையில் பெருமாள் மனைவியின்  கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் நகை மற்றும் பீரோவில் வைத்திருந்த 13 சவரன் நகை ஆகியவை கொள்ளையடிக் _கப்பட்டது தெரியவந்தது. குற்றவாளிகளை பிடிக்க திருத்தணி, திருவாலங்காடு, ஆர்.கே. பேட்டை காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் மகனின் உடலை போலீசார் திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நகைக்காக மனைவி மற்றும் மகனை கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |