Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“குழந்தைகளை தாக்கும் மர்ம காய்ச்சல்”… மூவர் பலி… அதிர்ச்சியில் மக்கள்..!!

கொரோனா பரவலை தொடர்ந்து தற்போது மர்ம காய்ச்சல் பரவி வருவதாகவும், இதனால் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவலை தொடர்ந்து தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. மதுரை  மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால், இதுவரை 45 க்கும் மேற்பட்டோர், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு 13 வயதுடைய சிறுவன் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதை தொடர்ந்து அடுத்த இரண்டு நாட்களில் அந்த பகுதியில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் டெங்கு காய்ச்சலுக்கும் இவர்களது மரணத்துக்கும் தொடர்பு இல்லை என தெரிவித்துள்ளனர். இது மக்களிடையே பெரும் அச்சத்தை எழுப்பியுள்ளது. டெங்கு அல்லாது வேறு மர்ம காய்ச்சல் பரவுகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Categories

Tech |