உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் அருகே ஆசாரா என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் ஆரிப் (30) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அழகு சாதன பொருட்களை ஊர் ஊராக சென்று விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த மஹ்ஜபீன் (27) என்ற பெண்ணுக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஆரிப்புக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 3 பெண் குழந்தைகள் இருக்கும் நிலையில, மஹ்ஜபீனுக்கும் ஏற்கனவே திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கின்றனர்.
இவர்களின் கள்ளக்காதலுக்கு பெண் வீட்டில் பலத்த எதிர்ப்பு இருந்ததால் இருவரும் வீட்டுக்கு தெரியாமல் ஊரை விட்டு ஓடி விட்டனர். கடந்த 20 நாட்களாக தலைமறைவாக இருந்த கள்ளக்காதல் ஜோடியை போலீசாரும், குடும்பத்தினரும் வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் மீரட் நகரில் வீடு எடுத்து தங்கியிருந்த கள்ளக்காதல் ஜோடியை மஹ்ஜபீனின் சகோதரர் ஊருக்கு அழைத்து வந்துள்ளார்.
அதன் பிறகு ஆரிப் மற்றும் மஹ்ஜபினை கொடூரமான முறையில் கொலை செய்து ஆணின் சடலத்தை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலும், பெண்ணின் சடலத்தை காட்டு பகுதியிலும் வீசிவிட்டு தானாகவே முன்வந்து போலீஸிலும் சரணடைந்து விட்டார். இதனையடுத்து காவல்துறையினர் 2 பேரும் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.