ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த கடைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை பகுதியில் ஊரடங்கு விதிமுறைகளை மீறி ஜவுளி கடைகளில் வியாபாரம் செய்து வருவதாக தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி தாசில்தார் ரவிச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அந்தப் பகுதிக்கு சென்றனர். அப்போது பட்டாபிராமர் கோவில் பகுதியில் 2 ஜவுளி கடைகள் விதிமுறைகளை மீறி வியாபாரம் நடத்தி வந்ததால் அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.
இதேபோன்று புதிய பேருந்து நிலையம் பகுதியில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட 2 செருப்பு கடை உரிமையாளருக்கு அதிகாரிகள் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் திருச்சூழி சாலையில் விதிமுறைகளை மீறி பொருட்கள் விற்பனை செய்த பர்னிச்சர் கடையே அதிகாரிகள் பூட்டு போட்டனர்.