சட்டவிரோதமாக ரேஷன் அரிசியை பதுக்கி வைத்த வாலிபரை காவல்துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கிட்டம்பட்டி கிராமத்தில் மணல்பள்ளம் பகுதியில் ரேஷன் அரிசினை பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சின்னசாமி என்பவரின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அங்கு ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்தது காவல்துறையினருக்கு தெரியவந்தது.
இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கோழிப்பண்ணை மற்றும் டிபன் கடைகளுக்கு வழங்குவதற்காக இந்த அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து இதில் சம்பந்தப்பட்ட சின்னசாமியை கைது செய்தனர். அதன்பின் பதுக்கி வைத்திருந்த அந்த அரிசியை காவல்துறையினர் பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது சின்னசாமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.