திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான குட்கா, புகையிலை பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர் .
திருவண்ணாமலை மாவட்டம் தூசி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள மளிகை கடைகள் ,பெட்டிக்கடைகளில் குட்கா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு பவன்குமார் ரெட்டி உத்தரவின்படி ,தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தலைமையிலான போலீசார் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அப்துல்லாபுரம் கிராமத்தில் சேர்மராஜ் என்பவருடைய வீட்டிற்கு வந்த காரில் இருந்து ஆட்டோவில் ரூபாய் 1 லட்சம் மதிப்பிலான 150 கிலோ குட்கா மற்றும் புகையிலை பாக்கெட்டுகள் மாற்றப்பட்டது. அப்போது உடனடியாக சென்ற காவல்துறையினர் அவர்கள் பயன்படுத்திய கார் ,ஆட்டோவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து சேர்மராஜ் அவரிடம் வேலை பார்க்கும் தமீம்அன்சாரி(24), சலீம் (24) ஆகிய 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.