கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.
நாகை மாவட்டம் பொரவச்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலின் பேரில் தனிப்படை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் காவல்துறையினர் ஆகியோர் நேற்று அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டை சோதனை செய்தபோது கஞ்சா விற்பனை நடப்பது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வீட்டில் இருந்த 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த கீழ்வேளூர் காவல்துறையின் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நாகை வெளிப்பாளையம் வடக்கு நல்லியான் தோட்டம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்ற நபரை கைது செய்தனர்.