Categories
தேசிய செய்திகள்

 “அதிசயம்” பால் கொடுக்கும் ஆண் ஆடு….. இது தான் காரணம்….. மருத்துவர்கள் தகவல்…!!

ராஜஸ்தானில் ஆண் ஆடு ஒன்று நாள்தோறும் 250 மில்லி லிட்டர் பால் கொடுக்கும் அதிசயம் நிகழ்ந்துள்ளது.

கருவில் இருக்கும்போது ஹார்மோன்களில் அல்லது உடலில் உள்ள ஏதேனும் செல்களில் மாற்றங்கள் ஏற்பட்டால் அது பிறப்பில் ஒரு வித்தியாசமான மாறுதல்களை உண்டாக்கும். உதாரணத்திற்கு இரட்டை தலையோடு விலங்குகள் பிறப்பது. இது விலங்குகளில் மட்டுமல்லாமல் மனிதர்களிடையேயும் இதே போன்ற மாற்றங்கள் கருவிலிருக்கும் போது ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் நடக்கும். அதற்காக அவர்களை வித்தியாச பிறவியாக கருத கூடாது.

அந்த வகையில், ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் உள்ள ஒரு கிராமத்தில் ராஜீவ் குஷ்வாகா என்பவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவர் வளர்த்து வரும் ஆடுகளில் ஆண் ஆடு ஒன்று தினமும் 250 மில்லி லிட்டர் வரை பால் கொடுத்து வருவதாக அவர் தெரிவிக்க, இந்த செய்தி கிராமம் முழுவதும் தீயாய் பரவி பேசுபொருளாக மாறியுள்ளது.

பின் இதுகுறித்து மருத்துவர்களிடம் தகவல் தெரிவிக்கவே சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் ஆட்டை நேரில் பார்த்து பரிசோதனை மேற்கொண்டனர். அப்போது ஆடு கருவில் இருக்கும் போது ஹார்மோன் சமச்சீர் குறைவு ஏற்பட்டதே இந்த சம்பவத்திற்கு காரணம் என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

 

Categories

Tech |