சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது தான் கொரோனா வைரஸ். இந்த கொடூர வைரஸ் தற்போது உலகின் 188 நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது. இந்த கட்டுப்படுத்த உலக நாடுகள் முயற்சிகள் மேற்கொண்டாலும் வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு தான் செல்கிறது.
மேலும், வளைகுடா நாடுகளில் இதன் தாக்கம் தீவிரமடைந்துள்ளது. சவுதி அரேபியாவில் 392, பஹ்ரைனில் 310, ஐக்கிய அரபு அமீரகத்தில் 153 பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்த நோய் பாதிப்பைக் கட்டுப்படுத்தும் விதமாக வளைகுடா நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில், தற்போது ஐக்கிய அரபு அமீரகம் முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
அச்சுத்தாள்கள் மூலம் கொரானா பரவும் அபாயமுள்ள நிலையில், அங்குள்ள அச்சு நிறுவனங்கள் அனைத்தையும் மூடிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து செய்தித்தாள்கள், வார இதழ்கள் உள்ளிட்ட அனைத்து அச்சு நடவடிக்கைகளும் நிறுத்திவைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.