Categories
சினிமா தமிழ் சினிமா

கே.ஜி.எப் இயக்குனர்- பிரபாஸ் இணையும் ‘சலார் ‘… படத்தில் வில்லன் இவர் தானா ?…!!!

கே.ஜி.எப் இயக்குனர்- பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் ‘சலார்’ படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது .

கன்னட திரையுலகில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் ‘கே ஜி எஃப்’ . இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கியிருந்த  இந்த படத்தில் கதாநாயகனாக யாஷ் நடித்திருந்தார். தமிழ் ,மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது. இந்த படம் வெளியான அனைத்து மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது . தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராகியுள்ளது  . இதையடுத்து இயக்குனர் பிரசாந்த் நீல் நடிகர் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் ‘சலார்’ படத்தை இயக்குகிறார் .

Hombale Films to make pan-India movie 'Salaar' with Prabhas

மெகா பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படத்தை கே.ஜி.எப் பட தயாரிப்பு நிறுவனம் ஹொம்பாளே பிலிம்ஸ் தயாரிக்கிறது . இந்தப் படத்தின் தொடக்க விழா சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்றது . இந்த படத்தில் பிரபாஸுக்கு வில்லனாக ஹிந்தி நடிகர் ஜான் ஆபிரகாம் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது . இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது . விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .

Categories

Tech |