Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபாஸ் படத்தில் நடனமாடும் ‘கேஜிஎஃப்’ பட நடிகை…. வெளியான தகவல்…!!!

கே ஜி எஃப் பட நடிகை பிரபாஸ் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாட உள்ளார்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உருவான திரைப்படம் ‘கே ஜி எஃப்’. தேசிய அளவில் வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி ஹீரோயினாக நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் பிரபலமான ஸ்ரீநிதி தற்போது முன்னணி நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக ‘கோப்ரா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மேலும் கேஜிஎஃப் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி பிரசாந்த் நீல் இயக்கத்தில் தேசிய பிரபலம் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட உள்ளதாக தெரியவந்துள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக வீசி வருவதால் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சலார் திரைப்படத்தின் படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய உடன் ஸ்ரீநிதி ஷெட்டி நடனமாடும் படப்பிடிப்பு நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.

Categories

Tech |