Categories
சினிமா தமிழ் சினிமா

கேஜிஎப்-3 திரைப்படம் பற்றி…. ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் குட் நியூஸ்….!!!!!

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியாகிய கேஜிஎப்-1, கேஜிஎப்- 2 ஆகிய 2 படங்களும் வெளியாகி மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதனால் கேஜிஎப்-3 திரைப்படம் பற்றி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அது பற்றி படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரங்கடூர் ஒரு அப்டேட் வெளியிட்டு உள்ளார்.

அதாவது, கேஜிஎப்-3 படத்துக்கான கதை, திரைக் கதையை பிரசாந்த்நீல் முன்பே தயார் செய்துவிட்டார். அந்த கதையில் யஷின் இளமைக் காலம் மற்றும் பிளாஷ்பேக் காட்சிகள் இடம்பெறும். இப்போது பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி வரும் பிரசாந்த்நீல், அப்படத்தை முடித்ததும் கேஜிஎப் திரைப்படத்தின் 3-ஆம் பாகத்திற்கான பணிகளை தொடங்க இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |